வரலட்சுமியை மணக்கும் விஷால்

வரலட்சுமியை மணக்கும் விஷால்

1 mins read

நடிகர் விஷாலும், நடிகை வரலெட்சுமியும் காதலிப்பதாக ஆண்டுக் கணக்கில் கிசுகிசுக்கப்பட்டு வந் தது. பல நிகழ்ச்சிகளுக்கு இருவ ரும் ஒன்றாக சென்றது, விருந்து நிகழ்வுகளில் நெருக்கத்துடன் காணப்பட்டது எல்லாம் இந்த கிசுகிசுவுக்கு வலு சேர்த்தன. விஷால் எனது சிறந்த நண்பர் என்றார் வரலெட்சுமி. தனது வருங் கால மனைவி ஒரு நடிகை என்றார் விஷால். இப்படி இருவரும் மறைமுகமாக காதலை வெளிப்படுத்தி வந்த நிலையில், இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகவும் கூறப்பட்டது. கடந்த மூன்ற ஆண்டுகளாக சுற்றிச் சுழன் றடித்த இத்தகைய செய்திகள்தான், வரலெட்சுமியின் தந்தை சரத்குமா ருடனான விஷாலின் மோதலுக்கு முக்கியக் காரணம் என்றும் சிலர் கூறினர்.

இந்நிலையில் பல்வேறு யூகங்கள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் விஷால். வேறொன்றுமில்லை, தனது காதல் விவகாரத்தை வெளிப்படை யாக ஒப்புக் கொண்டுள்ளார். "வரலெட்சுமி என் பள்ளித்தோழி. எங்களுடைய திருமணம் நடிகர் சங்க கட்டடத்தில்தான் நடக்கும். இது தொடர்பாக நடிகர் கார்த்தி யிடம் இப்போதே விவரம் சொல்லி, குறிப்பிட்ட தேதியையும் தெரியப் படுத்தி உள்ளேன்," என்று பகிரங் கமாக அறிவித்திருக்கிறார் விஷால். மகிழ்ச்சி!

'மதகதராஜா' படத்தின் ஒரு காட்சியில் விஷால், வரலட்சுமி