'சூப்பர் ஸ்டார்' ரஜினியின் வாழ்க்கை வரலாற்றைப் படம் எடுக்கப் பலரும் முயற்சித்தார்கள். ஆனால் ரஜினி அதற்கு சம்மதிக்கவில்லை. சிலர் அவரைச் சுயசரிதை எழுதச் சொன்னார்கள். "சுயசரிதை எழுதினால் உண்மையை எழுத வேண்டும். சில உண்மைகள் பலரைக் காயப்படுத்தும். அதனால் வேண்டாம்," என்று மறுத்தார் ரஜினி. ஆனால் தற்போது தனது வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கத் தனது மகள்களுக்கு அனுமதி அளித்துள்ளார். "சாதாரண நிலையில் இருந்து உயர்ந்த நிலைக்கு அப்பா வந்தது மிகப்பெரிய சாதனை. இதற்குப் பின்னால் அவரது கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் இருக்கின்றன.
"அக்கா ஐஸ்வர்யா வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார். அதை அப்பாவிடம் காட்டி அவரது ஒப்புதலுக்குப் பிறகு நான் அதை இயக்க இருக்கிறேன். அப்பாவைப் பற்றி மற்றவர்களைவிட எங்களுக்குத் தான் அதிகம் தெரியும் என்பதால் நாங்களே இதனைச் செய்ய முடிவு செய்திருக்கிறோம்," என்றார் இயக்குநர் சவுந்தர்யா.

