அதிர்ச்சியில் தமிழ்த் திரையுலகம் பிரபல திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞ ருமான நா. முத்துக்குமார் நேற்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 41. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை இருமுறை வென்றவர் அவர். மிக இளம் வயதில் முத்துக்குமார் காலமானது திரையுலகத்தினரை அதிர்ச்சி யில் மூழ்கடித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத் தில் பிறந்த முத்துக்குமார், அங்குள்ள பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்ற வர். சிறு வயது முதலே எழுதுவதில் நாட்டம் கொண்டவர். பின்னர் திரைப்பட இயக்குநராகும் கனவுடன் சென்னை வந்து பிரபல இயக்குநர் பாலு மகேந்திரா விடம் உதவி இயக்குநராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் இயக்குநர் சீமான் மூலம் 'வீரநடை' படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார் முத்துக்குமார். அதன் பிறகு ஏராளமான படங்களுக்கு நூற்றுக் கணக்கான பாடல்கள் எழுதினார். இளையராஜா, ஏஆர் ரகுமான், யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ்குமார், ஹாரிஸ் ஜெயராஜ் என அத்தனை முன் னணி இசையமைப்பாளர்களுடனும் பணி யாற்றியுள்ளார்.
திரைத்துறை சார்ந்த அனைவரிடமும் பொது வெளியிலும் மிகவும் நட்பாகவும் இணக்கமாகவும் இருந்தவர் நா. முத்துக் குமார். குறிப்பாக யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாசுக்கு மிக நெருக்கமான நண்பராகத் திகழ்ந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் 'தங்க மீன்கள்' படத்துக்காக இவர் எழுதிய 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' பாடலுக்கு முதல் தேசிய விருதைப் பெற்ற அவர், அடுத்து ஜிவி பிரகாஷ் இசையில் 'சைவம்' படத்தில் இடம்பெற்ற 'அழகே அழகே' பாடலுக்காக இரண்டாவது தேசிய விருதினைப் வென்றார்.
சிறந்த பாடலாசிரியருக்கான விருதை அதிபரிடம் இருந்து பெறும் முத்துக்குமார்.

