விஜய், ஜெயம் ரவியை வைத்துப் படம் இயக்க ஆசைப்படுவதாக நடிகர் விக்ரம் கூறியுள்ளார். விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் 'இருமுகன்'. இப்படத்தில் இரு வேறு வித்தியாசமான கதாபாத்தி ரங்களில் நடித்திருக்கிறார் விக்ரம். இவர் இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். கடந்த ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின் போது ஏற்பட்ட பாதிப்புகளை ஒரு பாடலாக உருவாக்கி, அந்தப் பாடலில் பல்வேறு நடிகர்களை நடிக்க வைத்து இயக்கியிருந்தார் விக்ரம்.
அந்தப் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து தற்போது அவருக்கும் படம் இயக்கும் ஆசை துளிர்விட்டுள்ளது. விக்ரம் தனது மகன் துருவ்வை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறாராம். எனினும் துருவ் இன்னும் அதற்குத் தயாராகவில்லை. அதனால் விஜய், ஜெயம் ரவியை வைத்துப் படம் இயக்க ஆசைப்படுவதாகக் கூறுகிறார்.

