'சுந்தரா டிராவல்ஸ்' ராதா மீது மீண்டும் புகார்

'சுந்தரா டிராவல்ஸ்' ராதா மீது மீண்டும் புகார்

1 mins read
64cdbcb4-0a6f-4160-85bb-90febbcee3fc
-

நடிகை ராதாவால் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஒரு பெண் மீண்டும் புகார் அளித்துள்ளார். 'சுந்தரா டிராவல்ஸ்' என்ற படத்தில் நடித்திருப்பவர் ராதா. இவர் மீது சென்னையைச் சேர்ந்த உமாதேவி என்பவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகார் மனுவில், 'சுந்தரா டிராவல்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ள ராதாவிடம் இருந்து தமது கணவரை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அந்த புகார் மனு மீதான விசாரணை நடந்து வந்தது.

இதற்கிடையே உமாதேவி சென்னை காவல்துறையில் புதிதாக இன்னொரு புகார் மனுவையும் கொடுத்துள்ளார். அந்தப் புகார் மனுவில் நடிகை ராதாவால் தனது கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் உடனடியாக நடிகை ராதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.