விஷாலுக்கு எதிராகத் தீர்மானம்

விஷாலுக்கு எதிராகத் தீர்மானம்

1 mins read
b53b3d93-e549-4421-bff5-98f0f0922a90
-

நடிகர் விஷால் வார இதழுக்கு அளித்த பேட்டிக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் சங்கத்தை அவமரியாதை செய்யும் வகையில் பேட்டி அளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"அதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், ஒருவார காலத்திற்குள் விஷால் தனது பேட்டிக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தீபாவளிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ள 'கத்திச்சண்டை' திரைப்படம் தவிர்த்து அவர் நடிக்கும் எந்தப் படத்திற்கும் தயாரிப்பாளர் சங்கமும் தயாரிப்பாளர்களும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனத் தீர்மானிக்கப்படுகிறது," என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.