ரஜினி நடித்த படங்களின் தலைப்பை மீண்டும் தங்கள் படங்களுக்குச் சூட்டுவது இன்றைய கதாநாயகர்களின் விருப்பமாக உள்ளது. இம்முறை 'தர்மதுரை'யாக கிளம்பியிருப்பவர் விஜய் சேதுபதி. சீனு ராமசாமி இயக்கியுள்ள படம் இது. "பொதுவாக நிலம் தொடர்பான கதை சொல்லும் படங்கள்தான் சீனு ராமசாமி சாரின் அடையாளம். ரஜினி படத்தின் தலைப்பை வைத்திருந்தாலும் அவரது அடையாளத்தை விட்டுக் கொடுக்காத படமாக 'தர்மதுரை' இருக்கும்," என்கிறார் விஜய் சேதுபதி. படத்தின் தலைப்பு குறித்து? "முதலில் சீனு சார் சொன்ன தலைப்பு 'தர்மா'. விஜயகாந்த், இந்தத் தலைப்பில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷுக்கு 'தர்மதுரை' என்கிற தலைப்பின் மீது மோகம். தானே சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி அந்தத் தலைப்பை வாங்கிக் தருவதாகச் சொன்னார். அதன்படியே முயற்சி செய்து சாதித்துவிட்டார்.
"ஒருநாள் என்னைத் தேடி வந்து கதை சொன்னார் இயக்குநர். 'பிடித்திருந்தால் நடிக்கலாம்... மற்றபடி நான் கட்டாயப்படுத்த விரும்பவில்லை' என்றார். ஏற்கெனவே என்னை வைத்து அவர் இயக்கிய 'இடம் பொருள் ஏவல்' படம் வேறு இன்னும் வெளி யாகவில்லை. அதனால்தான் அவருக்குத் தயக்கம். "ஆனால் எனக்கு அவர் மீதான நம்பிக்கை கொஞ்சம் கூடக் குறையவில்லை. எனவே கதை கேட்பதற்கு முன்பே எப்போது படப்பிடிப்பு என்று மட்டும் சொல்லுங்கள். நான் தயாராக இருப்பேன் என்று கூறிவிட்டேன்," என்கிறார் விஜய் சேதுபதி.
அடுத்து பேசிய சீனு ராமசாமி தமன்னாவை ஒப்பந்தம் செய்தது குறித்து விவரித்தார். "விஜய் சேதுபதிக்குப் பளீர் என ஒரு ஜோடி வேண்டுமென ஆசைப்பட்டேன். ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பைக் கண்டு தமன்னா மிரண்டுவிட்டார். அவருக்கு ஓர் ஆலோசனை வழங்கினேன். 'விஜய் நடிப்பதைப் பார்த்து பதிலுக்கு நீங்களும் நடித்தால் போதும். உங்கள் நடிப்பு தன் னால் எடுபடும்' என்றேன். அவரும் அப்படியே செய் தார். இப்போது திரையில் தனது நடிப்பைப் பார்த்து அவரே ஆச்சரியப்படுகிற அளவுக்குக் காட்சிகள் இயல்பாக அமைந்துள்ளன.
பொதுவாக உங்கள் படங்களில் பெரிய நாயகிகள் இருக்க மாட்டார்களே?
"சரிதான்... படத்தின் தயாரிப்புச் செலவு காரணமாக அதிக சம்பளம் கேட்காத நாயகிகளையே தேர்வு செய்வேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளரோ செலவு பற்றி கவலையில்லை தமன்னாவையே ஒப்பந்தம் செய்யுங்கள் என்று கூறி மும்பைக்கு அனுப்பி வைத்தார். தமன்னாவை அவரது வீட்டில் சந்தித்தபோது, 'லீவ் மீ அலோன்' எனும் வாசகத் துடன் கூடிய 'டி'- சட்டையை அணிந்திருந்தார். 'இதென்ன சோதனை' என நினைத்தபடியே கதையைச் சொன்னேன். "தமன்னா ஆங்கிலத்தில் அசத்தக் கூடியவர். எனக்கு ஆங்கிலம் கொஞ்சம் தகராறு. இருந்தாலும் தைரியமாக முழுக் கதையும் சொல்லட்டுமா அல்லது உங்கள் பகுதியை மட்டும் சொல்லட்டுமா என்று கேட்டேன். முழுக்கதையையும் சொல்லச் சொன்னார்.
"எனது அரைகுறை ஆங்கிலத்தில் கதை கேட்டிருந்தாலும் அவருக்குப் பிடித்திருந்தது. உடனே நடிக்கிறேன் என்றார். பிறகுதான் என் பதற்றம் தணிந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே என மேலும் இரு நாயகிகள் எதற்காக? "கதைக்குத் தேவைப்பட்டது. 'காக்கா முட்டை' பார்த்தபோது ஐஸ்வர்யாவின் நடிப்பு எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதனால் தான் அவரை 'இடம் பொருள் ஏவல்' படத்தில் நடிக்க வைத்தேன்.
"அப்போது நேரடியாக அவரது திறமையை உணர்ந்தேன். இந்தப் படத்திலும் அவரை பயன்படுத்திக் கொண் டேன். கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்த வுடன் அவரிடம் சொன்னேன். 'நீங்கள் ஸ்மிதா பாட்டீல், ஷபனா ஆஸ்மி மாதிரியான நடிகை. இம் மாதிரி நடிகை கள் உருவா வது ரொம்ப அபூர்வம்' என்று. ஐஸ்வர்யா அப்படியே நெகிழ்ந்து போனார். அவரைப் பற்றி நான் சொன் னது உண்மை. "கதையில் கலகலப்பான ஒரு வேடம் இருந்தது. படம் முழுக்க வருவது மாதிரி பெரிய வேடம் கிடையாது. தயங்கிய படிதான் சிருஷ்டியைக் கேட்டேன். எனக்காகச் சம்மதித்தார். கிடைத்த சிறு வாய்ப்பிலும் தன் பங்கை நிறைவாகச் செய் துள்ளார்.