திரைப்படம் ஆகிறது பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை

திரைப்படம் ஆகிறது பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை

1 mins read
9d156953-162f-493d-93d1-b88237c44ff6
-

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை திரைப்படமாகிறது. அவரது வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். கதாநாயகிகளில் முதன் முதலில் கார் வாங்கி வீட்டில் நீச்சல் குளம் கட்டியவர் சாவித் திரி என்பர். 1935ல் ஆந்திராவில் பிறந்த இவர் தமது 46ஆவது வயதில் காலமானார். கதாநாயகியாக இருந்தபோது செல்வச் செழிப்பில் வாழ்ந்த அவர், சொந்தப் படம் தயாரித்து நஷ்டமடைந்து கடைசிக் காலத்தில் வறுமையில் வாடி இறந்தார். இந்த நிகழ்வுகளையெல்லாம் காட்சிப்படுத்தி சாவித்திரியின் வாழ்க்கை கதை படமாகிறது.