ரமேஷ்குமார்: 'மரணம் ஓர் இரக்கமற்ற கருப்பு ஆடு'

ரமேஷ்குமார்: 'மரணம் ஓர் இரக்கமற்ற கருப்பு ஆடு'

3 mins read
e77e4038-c539-406c-9f91-bf489cca2123
-

வரலாற்றில் அண்ணன் நா.முத்துக் குமாரின் வாழ்க்கையைத் தவறாக இடம்பெறச் செய்துவிடாதீர்கள் என அவரது தம்பி ரமேஷ்குமார் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நண்பர்களுக்கும் நலம் விரும்பி களுக்கும் என குறிப்பிட்டு அவர் எழுதிய அக்கடிதம் நெஞ்சை உருக்குவதாக உள்ளது. "அம்மா என்றழைக்கத் தெரி யாத வயதில் எங்கள் தாயை இழந்தோம். அதற்குப் பிறகான ஒரு நிகழ்ச்சியில் 'பாவம் தாயில்லாப் பிள்ளைகள்' என சுற்றத்தார் எங்களைப் பரிதாபப் பார்வை பார்த்ததை விரும்பாத எங்கள் தந்தை, உறவினர்கள் ஒன்றுகூடும் எல்லா விருந்து நிகழ்வுகளிலும் விபரம் தெரியும் வரையில் எங்களைத் தவிர்த்தார். "அதே மனநிலையில்தான் நாங்களும் வளர்ந்தோம். இன்று காலம் அதே கொடூர மனநிலைக்கு எங்கள் பிள்ளைகளைத் தள்ளியி ருக்கிறது. எங்களது பிள்ளைகள் மீதும் அந்த பரிதாபப் பார்வைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்ப வில்லை.

"உங்கள் அனைவரது நோக்கமும் எங்களுக்கு உதவ வேண்டும் என்கிற நினைப்பும், என் அண்ணன் சம்பாதித்த நண்பர்களையும், உறவுகளையும் பார்க்கையில் அவன் திருப்தியான வாழ்வு வாழ்ந்ததாகவே எங்களை எண்ண வைக்கிறது. சினிமாவை எவ்வளவு நேசித்தானோ அதே அளவிற்கு எல்லோரையும் தன் உறவுகளாகவே கருதிவந்தான். கோடிக் கணக்கானவர்களின் அன்பை விட அவன் சம்பாதித்த எதையும் நாங்கள் பெரிதாகக் கருதவில்லை. "ஏழ்மையின் பிடியில் பிறந்திருந் தாலும் எங்களது வாழ்வு எல்லா காலங்களிலுமே எளிமையாகவே இருந்திருக்கிறது. எங்கள் மனநிலை என்றும் பணத்தை முக்கியமாக நினைத்ததில்லை. விமானங்களில் உயரப் பறந்தாலும், செருப்புகளற்ற எங்களது கால்கள் இளவயதிலேயே கிராமத்தின் நெருஞ்சி முட்கள் பூத்த ஒத்தையடி பாதைகளுக்கும், சென்னையின் கரைந்தோடுகிற தார் சாலை களின் உஷ்ணத்திற்கும் பழக்கப் பட்டே இருந்தது. எங்களது தந்தை எங்களைப் பழக்கியது போலவே எங்களது பிள்ளைகளையும் இந்த எளிமைக்குப் பழக்கப்படுத்தியே வளர்த்திருக்கிறோம்.

எங்களது எளிய வாழ்விற்குத் தேவையான அனைத்து வசதி களையும் செய்துவிட்டே இறந் திருக்கிறான். கடனில்லாத வாழ்க்கை, யாரேனும் உதவி எனக் கேட்டால் எந்த நிலையிலும் தட்டாமல் உதவி செய்வது என்கிற ஒன்றையே இறக்கும் வரையில் கடைப்பிடித்தவன் அவன். "செய்திகளில் வருகிற பல கதைசொல்லிகளின் கட்டுக் கதைகளைப் போல அமைந்தது அல்ல அவனது வாழ்வு. அவனது வாழ்வு நெறிமுறைகளுக்கு உட்பட் டது. தனக்கான ஒழுக்கத்தை அவன் வாழ்வின் எந்தவொரு தருணத்திலும் தவறவிட்டதே கிடையாது. நான் அவனது உழைப்பை அருகிலிருந்து பார்த்து வளர்ந்தவன். அவனது உழைப்பு அசுரத்தனமானது. அதன் வெளிப் பாடான வளர்ச்சியைப் பார்த்தும் எங்களது பாதங்களைத் தரையில் தான் வைத்திருந்தோம்.

"தயவு செய்து வரலாற்றில் அவனது வாழ்க்கையைத் தவறாக இடம்பெறச் செய்து விடாதீர்கள். "இழவு வீட்டில் இழந்ததைவிட கதைச்சொல்லிகளின் ஆதரவுக் கதைகளும், கடிதங்களும் எங்களது இருக்கிற வாழ்வையும் தின்று தீர்க்குமே என அஞ்சு கிறேன். எங்கள் பிள்ளைகளின் மனதில் வரும் காலங்கள் தவறான விதைகளை விதைக்கக் கூடாது எனும் பதைபதைப்பே இக்கடிதம். மரணம் ஒரு முரட்டுத்தனமான, இரக்கமேயில்லாத கருப்பு ஆடு. ஒவ்வொரு முறையும் அது தனக்குப் பிரியமான ரோஜாவை இளவயதிலேயே தின்று தீர்த்து ஏப்பம் விடுகிறது," என்று ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மூத்த நடிகர் டெல்லி கணே‌ஷுடன் கவிஞர் நா.முத்துக்குமார்.