சூரியின் காரை வழிமறித்த பேய்

சூரியின் காரை வழிமறித்த பேய்

2 mins read
8feba6d2-03b5-4a8f-b789-8e2f0adf0ddf
-

நடிகர் சூரி, பழனி சாலையில் காரில் சென்­று­கொண்­டி­ருந்த­போது பேயை நிஜத்­தில் பார்த்­த­தாக காணொ­ளி­ ஒன்றைத் தமது 'ஃபேஸ்புக்' பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார். வெண்ணிலா கப­டிக்­குழு படத்­தின் மூலம் தமிழ்ச் சினி­மா­வில் நகைச்­சுவை நடி­கனாக அறி­மு­க­மா­ன­வர் நடிகர் சூரி. தற்போது முன்னணி நகைச் சுவை நாய­கர்­களுள் ஒரு­வ­ராக வலம் வரு­கிறார். இந்­நிலை­யில், பேயை நேரில் பார்த்­த­தா­கக் கூறி திகில் கிளப்­பி ­இ­ருக்­கிறார் அவர். இது தொடர்­பாக காணொளி ஒன்றை­யும் தனது 'ஃபேஸ்புக்' பக்­கத்­தில் வெளி­யிட்­டுள்­ளார் அவர். சில தினங்களுக்கு முன்பு அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் கோவை=பழனி நெடுஞ்சாலை­யில் காரில் பய­ணித்­துக் கொண்­டி­ருந்தா­ராம் சூரி. அப்போது தூரத்­தில் கும்­மி­ருட்­டாக இருந்த சாலையின் நடுவே வெளிச்சப்பொட்டாய் ஓர் உருவம் வழியை மறித்து நிற்பது போன்று இருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்­சி­யடைந்த சூரியின் ஓட்­டு­நர் காரை சிறிது தூரத்­தி­லேயே நிறுத்­தி­விட்டு செய்­வத­றி­யாது திகைத்­தார். அதனைப் பார்த்த சூரி காரின் விளக்­கு­களை அணைத்து விட்டு தைரி­ய­மாக அந்த உரு­வத்­தின் மீது மோதிச் செல்லுமாறு கூறினா­ராம். ஓட்­டு ­ந­ரும் அப்­ப­டியே செய்­தா­ராம். அந்த உருவம் இருந்த இடத்தைக் கடக்­கும்­போது காரை யாரோ பல­மா­கத் தாக்­கு­வது போன்ற சத்தம் மட்டும் கேட்ட­தா­க­வும் விளக்­கு­கள் அணைக்­கப்­பட்­ டி­ருந்த­தால் என்ன நடந்தது எனத் தெரி­ய­வில்லை எனவும் 'ஃபேஸ்­புக்' பதிவில் சூரி குறிப்­பிட் ­டுள்­ளார்.

சுமார் ஒரு நிமிடம் மட்டுமே ஓடக்­கூ­டிய அந்த காணொளிக் காட்சி தற்போது வைரலாக இணை­யத்­தில் பரவி வரு­கிறது. இதனைப் பார்த்த இணைய வாசிகள், 'சூரியின் நடிப்பு அபாரம்', 'ஓட்டுநருக்கு சரியாக நடிப்பு வரவில்லை' என்றெல்லாம் கலாய்த்திருக்கிறார்கள். பேய்ப் படங்கள் தற்போது அதிகமாக வெளிவருவதன் தாக்கம்தான் சூரியை இவ்வாறு யோசிக்க வைக்கிறது என்று சிலர் முணுமுணுக்கின்றனர்.