'தர்மதுரை' புகழ்பாடும் இணையவாசிகள்

'தர்மதுரை' புகழ்பாடும் இணையவாசிகள்

1 mins read
a66aed78-7990-45aa-84a8-e4d569a9d157
-

தர்மதுரை படம் அருமை என்றும் விஜய் சேதுபதியும் ராதிகாவும் நடிப்பில் கலக்கிவிட்டனர் என்றும் படம் பார்த்தவர்கள் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர். சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த தர்மதுரை படம் நேற்று வெளியானது. படத்தைப் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் உடனடியாகக் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். "முதல் பாதி கிராமத்தில் தொடங்கி 'பிளாஷ்பேக்'கில் மருத்துவக் கல்லூரி வாழ்க்கைக் குச் செல்கிறது. விஜய் சேதுபதி வழக்கம் போன்று நன்றாக நடித்துள்ளார்," என இணையவாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்திற்கான செய்தியுடன் கூடிய அழகான கதையில் அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக நடித்துள்ளனர் என்றும் யுவன் சங்கர் ராஜாவின் இசையைப் பாராட்டியும் பலரும் 'டுவீட்' செய்துள்ளனர். "நடனத்திலும் விஜய் சேதுபதி பட்டையைக் கிளப்புகிறார். பெண்கள் பலத்த ஆதரவு அளிக்கின்றனர்," என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். தமன்னாவுடன் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் படம் இது எனினும் இருவருக்கும் இடையேயான அன் யோன்யம் சிறப்பாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருதுகின்றனர்.

'தர்மதுரை' படத்தில் விஜய் சேதுபதி, தமன்னா இடையே 'கெமிஸ்ட்ரி' சக்கைப்போடு போடுவதாக இணையவாசிகள் கருத்துரைத்துள்ளனர்.