வரலட்சுமி வேண்டுகோள்

வரலட்சுமி வேண்டுகோள்

1 mins read
98e3a52f-4343-4b65-b22d-3c4109e6166f
-

சிம்பு நடிப்­பில் வெளி­வந்த 'போடா போடி' படத்­தின் மூலம் நடிகை­யாக அறி­மு­க­மான வர­லட்­சுமி, இயக்­கு­நர் பாலாவின் 'தாரை தப்­பட்டை' படத்­தின் மூலம் பலரது கவ­னத்தை­யும் ஈர்த்­தார். தற்போது தமிழ், மலையாள படங்களில் நடித்து வரு­கிறார். நடிகர் விஷாலும் வர­லட்­சு­மி­யும் ஒன்றா­கப் பொது இடங்களுக்­ குச் செல்­வதைச் சுட்­டிக்­காட்டி அவர்­கள் இரு­வ­ருக்­கும் இடையே காதல் இருப்­ப­தா­க­வும் விரைவில் இரு­வ­ரும் திரு­ம­ணம் செய்­து­கொள்­ளப் போவ­தா­க­வும் செய்­தி­கள் வெளி­யா­கின. அண்மைய பேட்டி ஒன்­றில்­கூட விஷால், "என்­னுடைய திரு­ம­ணம் புதிதாக கட்­ட­வி­ருக்­கும் நடிகர் சங்கக் கட்ட­டத்­தில் நடை­பெ­றும். அதற்­காக, திருமண மண்ட­பத்தை பதிவு செய்து வைத்­தி­ருக்­கி­றேன்," என்று கூறி­யி­ருந்தார்.

அதை வைத்­துக்­கொண்டு விஷா­லுக்­கும் வர­லட்­சு­மிக்­கும் திரு­ம­ணம் நடக்­கப்­போ­வ­தாக செய்­தி­கள் பரவத் தொடங்­கி­ன. இதற்கு இரண்டு பேர் தரப்­பி­லும் எந்தப் பதிலும் இல்­லா­மலே இருந்­தது. இந்­நிலை­யில், முதன் ­முறை­யாக இந்த செய்­திக்கு வர­லட்­சுமி விளக்­கம் அளித் ­துள்­ளார். "இப்­போதைக்கு யாரையும் நான் திரு­ம­ணம் செய்­து­கொள்­ள­வில்லை. என்­னுடைய வேலையை மட்டுமே காத­லிக்­கி­றேன். என்­னுடைய திருமண செய்தி பற்றி யாரும் வதந்­தி­களை பரப்­ப­வேண்டாம்," என்று கேட்டுக் கொண்­டுள்­ளார். விஷாலைத் திரு­ம­ணம் செய்­து­கொள்­ளப்­போ­வ­தாக வெளி­வந்த வதந்­தி­களுக்கு வர­லட்­சுமி கொடுத்த முற்­றுப்­புள்­ளி­யா­கவே பலரும் இதைக் கரு­து­கின்ற­னர்.