'நாங்க பொருத்தமான ஜோடி'

'நாங்க பொருத்தமான ஜோடி'

1 mins read
6f20b61e-73d4-493e-beb9-2dbcd59e4a19
-

ஜீவா, நயன்­தாரா ஜோடி சேர்ந்து நடித்த திருநாள் படம் வெளியாகி ஒரு வாரத்­துக்­கு­மேல் ஆகிற நிலையில் திரை­ய­ரங்­கு­களில் ரசி­கர்­கள் கூட்டம் நிரம்பி வழி­கிறது. ஜீவா அடியாள் வேடத்திலும் நயன்தாரா துருதுரு பெண்ணாக வும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளனர். ஜீவா படத்­திற்­காகக் கடுமை­யாக உழைத்­தது திரையில் தெரி­கிறது. இந்­நிலை­யில் படத்­தின் வெற்றி விழா சென்னை­யில் உள்ள பிரசாத் லேப் ஸ்டூடியோ திரை­ய­ரங்கத்­தில் நடை­பெற்­றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய ஜீவா, "திருநாள் என் திரை­யு­லக வாழ்வில் முக்­கி­ய­மான படம். இயக்­கு­நர் ராம்நாத் என்­னி­டம் திருநாள் படத்தின் கதை சொன்­ன­போதே இது உங்களுக்­கா­கவே தைத்த சட்டை போன்று இருக்­கும் என்றார். கதையின் முதல் பாதியைக் கேட்­ட­தும் எனக்கு மிகவும் பிடித்­து ­விட்­டது," என்றார்.

திருநாள் படத்­திற்­கா­க­க் கடுமை­யாக உழைத்­ததாகக் கூறிய ஜீவா, நயன்தா­ரா­வின் நடிப் பை­யும் வெகு­வா­கப் புகழ்ந்தார். "நானும், நயன்­தா­ரா­வும் 'ஈ' படத்­தில் முதன்­மு­த­லாக ஜோடி சேர்ந்து நடித்­தோம். அதன் பிறகு ஒன்பது ஆண்­டு­கள் கழித்து மீண்டும் சேர்ந்து நடித்­துள்­ளோம். எங்கள் ஜோடிக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது. "நானும், நயன்­தா­ரா­வும் பொருத்­த­மான ஜோடி, ரசி­கர்­களுக்­குப் பிடித்தமான ஜோடி என்­கிறார்­கள்," என்று கூறினார். தன் குடும்பத்­தா­ருக்­குத் திருநாள் படம் பிடித்­தி­ருந்த­தா­கக் கூறிய ஜீவா, நயன்­தா­ரா­வு­டன் நடிப்­பது அனை­வ­ருக்­கும் பிடிக்­கிறது என்றார். நயன்தாராவின் தொழில் பக்தியே அவரை இந்த அள­வுக்கு உயர்த்­தி­யி­ருப்­ப­தா­க­வும் ஜீவா குறிப்­பிட்­டார்.