திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள் இயக்குநர் விஜய், அமலா பால் விவாகரத்து பெற்றுப் பிரிவது குறித்து பலர் பலவிதமாகப் பேசிவருகின்றனர். விஜய்யும் அமலா பாலும் ஒருவரை ஒருவர் குறையேதும் கூறாமல் பரஸ்பர விவாகரத்துக்கு மனுச் செய்துள்ளனர். இருவரையும் சேர்த்துவைக்க திரையுலகப் பிரபலங்கள் பலர் முயன்றாலும் தங்களது வாழ்க்கை குறித்த முடிவுகளைத் தாங்களே செய்துவிட்டதாகக் கூறி பேச்சுவார்த்தைக்கு அமலா பால் மறுத்ததாக செய்தி பரவியது.
'மைனா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமான அமலா பாலின் புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வலம் வர ஆரம்பித்துள்ளன. திருமணத்திற்குப் பிறகு நடிப்பதிலிருந்து சில காலம் விலகியிருந்த அமலா பால் 'அம்மா கணக்கு' 'பசங்க 2' போன்ற கதைக்கு முக்கியத்துவம் மிகுந்த படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார். தற்போது 'வடசென்னை' படத்தில் தனுஷுடன் நடித்து வருகிறார். வித்தியாசமான வேடங்களில் மீண்டும் முத்திரை பதிக்கும் நோக்கில் புதிய பட வாய்ப்புகளை அமலா பால் தேடி வருவதாகவும் அதற்காக எடுக்கப்பட்டவையே இந்தப் புதிய படங் களின் தொகுப்பு எனவும் கூறப் படுகிறது.

