'காஷ்மோரா'வில் மூன்று வேடங்களில் கார்த்தி

'காஷ்மோரா'வில் மூன்று வேடங்களில் கார்த்தி

2 mins read
158c89b5-e658-4bdb-be7e-9bea4c212dd0
-

'காஷ்மோரா' படத்­தில் மூன்று வேடங்களில் நடிக்­கிறார் கார்த்தி. மொட்டைத் தலையும் கத்தைத் தாடி­ யு­மாக வித்­தி­யா­ச­மான ஒரு வேடத்­தில் இந்தப் படத்­தின் முதல் சுவ­ரொட்டி நேற்று முன்­தி­னம் வெளி­யா­னது. அந்த சுவ­ரொட்­டி­யில் கார்த்தி மிரட்­ட­லாக இருக்­கிறார் என்று கூறு­கின்ற­னர் கார்த்தி ரசி­கர்­கள். 'காஷ்மோரா'வில் படைத் தளபதி, வயதான மன்னன், சராசரி மனிதன் என்று மூன்று வேடங்களில் நடித்திருக் கிறார் கார்த்தி. குறிப்­பாக படைத் தள­ப­தி­யாக நடித்­தி­ருக்­கும் ராஜ்­நா­யக் என்ற வில்லன் வேடத்­தில் இதுவரை எந்தப் படத்­தி­லும் பார்க்­காத வித்­தி­யா­ச­மான கார்த்­தியைப் பார்க்­க­லாம் என்­கிறது படக்­குழு. வில்லன் வேடத்­தில் பெரிய அளவில் அரா­ஜ­கம் செய்­ப­வ­ராக நடித்­துள்­ளா­ராம் கார்த்தி.

'ரௌத்­தி­ரம்', 'இதற்­கு­தானே ஆசைப்­பட்­டாய் பால­கு­மாரா' படங்களுக்­குப் பிறகு கோகுல் இயக்­கி­யுள்ள இந்தப் படம் சரித்­திர கதையாக உரு­வா­கி ­யி­ருக்­கிறது. அந்த வகையில் கார்த்தி, கோகுல் இரு­வ­ருக்­குமே இது முதல் சரித்­திரப் பட­மா­கும். இந்தப் படத்­தில் கார்த்­தி­யு­டன் நயன்­தாரா, ஸ்ரீதிவ்யா நடித்­தி­ருக்­ கின்ற­னர். கார்த்தி இந்தப் படத்­திற்­காக தனது நடை, உடை ஆகி­ய­வற்றை மாற்­றி­யுள்­ளார். படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இது குறித்­து தயா­ரிப்­பா­ளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகை­யில், "படத்­தில் கார்த்தி மூன்று வித்­தி­யா­ச­மான வேடங்களில் நடிக்கிறார். முதலில் 47 வகையான வேடங்களைப் போட்டுப் பார்த்து அதில் இந்த மூன்று வேடங்களைத் தேர்வு செய்தோம்.

"அதில் ஒரு வேடம்­தான் மொட்டைத்­தலை, நீண்ட தாடி, மீசை கதா­பாத்­தி­ரம். இந்த சுவ­ரொட்­டி காட்­சி­யில் மட்டும் சுமார் 300 நடி­கர்­கள் நடித்திருக்கின்றனர். "காஷ்மோரா' படத்­தில் நாம் இதுவரை பார்த்­தி­ராத கார்த்­தியைப் பார்க்­க­லாம். 'பாகுபலி' படத்­தில் சத்­தி­ய­ராஜ் நடித்­தி­ருந்த 'கட்­டப்பா' போல அசத்­த­லாக இருக்­கிறார் கார்த்தி," என்றார்.