விவேக பாரதி: முடிச்சுகள் கொண்ட கதைக்களம்

விவேக பாரதி: முடிச்சுகள் கொண்ட கதைக்களம்

1 mins read
fc0dc18a-17e0-4cc7-9927-2e567c495a7d
-

நர்கவி டாக்கிஸ் தயாரிக்கும் படம் 'அன்புக்குப் பஞ்சமில்லை'. இதில் விக்னேஷ் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். இவருடன் 'பந்து' படத்தில் நாயகனாக நடித்துள்ள பிரதாப், காயத்திரி ஐயர், கஞ்சா கருப்பு, துளசி தேவர், தேனி முருகன் உள் பட பலர் முக்கிய வேடங்களை ஏற்றுள்ளனர். சவுந்தர்யா இசையமைக்க அறிவுமதி, தேன்மொழி, கிருதயா, செங்கதிர்வாணன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். வசனங்களை சேதுபதி எழுத, கதை, திரைக்கதை எழுதி இயக்கி யுள்ளார் விவேக பாரதி.

"தஞ்சை டெல்டா பகுதியில் அக்காவின் மகள் வாழ்க்கைக்காக பாசப் போராட்டம் நடத்தும் ஒரு தாய் மாமன். தன்னைக் காதலிக்காவிட் டாலும் அவனைக் காதலித்த தைப் பெருமையாக நினைக்கும் நாயகி என உணர்வு பூர்வமான கதைக்களம் கொண்டது இப் படம். "தாய்மாமன் ஒரு புறம், அக்காள் மகள் மறுபுறம், அக்காள் மகளைக் காதலிக்கும் நாயகன் இன்னொரு புறம் என நிறைய முடிச்சுகளைப் போட்டுள்ளேன். "இவர்களின் வாழ்வியலை தஞ்சை மாவட்டத்தின் அழகிய டெல்டா பகுதிகளில், கண்ணுக்கு இனிமையாய் படமாக்கி உள்ளோம்.