கமல்ஹாசனுக்கு 'செவாலியே' விருது

கமல்ஹாசனுக்கு 'செவாலியே' விருது

1 mins read
f059ab81-9128-4a64-942b-3330ad011e6d
-

தமிழ்த் திரையுலகின் உச்ச நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் அரசு 'செவாலியே' விருது அறிவித்து இருக்கிறது. கலை, இலக்கியத் துறையில் தொடர்ந்து பங்காற்றி வருபவர்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் 'செவாலியே' விருது வழங்கி கெளரவிப்பது வழக்கம். இதில் இந்திய திரைத்துறையைச் சேர்ந்தவர்களில் முதல் இந்திய நடிகராக சிவாஜி கணேசன் இந்த விருதைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், நந்திதா தாஸ் ஆகியோரும் இவ்விருதைப் பெற்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்தாண்டு 'செவா லியே' விருதை கமல்ஹாசனுக்கு அறிவித் துள்ளது பிரான்ஸ் அரசு. இந்த விருது பிரான்சின் கலாசார, தகவல் தொடர்பு அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. பல்வேறு விருதுகளை வென்றிருக்கும் கமல்ஹாசனுக்கு 'செவாலியே' விருது அறிவித்திருப்பது மற்றொரு சாதனையாக கருதப்படுகிறது. விரைவில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இவ்விருதை வழங்கி கௌரவிக்க இருக்கிறது பிரான்ஸ் அரசு.