தனுஷ், அமலாபால் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் 'வேலையில்லா பட்டதாரி'. தமிழில் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து இப்படத்தைக் கன்னடத்தில் மறுபதிப்பு செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்கான உரிமையை 'ராக்லைன் புரொடக்சன்ஸ்' நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது இதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கன்னடத்தில் நந்தா கிஷோர் என்பவர் இயக்குகிறார். மனோரஞ்சன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கான நடிகை தேடும் படலம் நடைபெற்று வந்தது. தமிழில் நாயகியாக நடித்த அமலாபாலையே கன்னட மொழியிலும் ஒப்பந்தம் செய்யத் திட்டமிடுகிறார்களாம். இதற்காக விரைவில் அவரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ் பதிப்பு வெற்றி பெற்றதால் கன்னடத்திலும் அமலா பால் நடிப்பது ராசியாக இருக்கும் என படத் தயாரிப்புத் தரப்பு கருதுகிறதாம்.
கன்னட மறுபதிப்பிலும் அமலா பால்
1 mins read

