'ஜோக்கர்' ராஜு முருகனின் ஆசை

'ஜோக்கர்' ராஜு முருகனின் ஆசை

1 mins read
df979735-7f1d-4067-afb2-46e6832a3c34
-

'ஜோக்கர்' படத்தைப் பற்றி யாரும் தனக்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை என்று இயக்குநர் ராஜு முருகன் தெரிவித்துள்ளார். குரு சோமசுந்தரம் நடிப்பில் இவர் இயக்கியுள்ள இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக அவலங்களைப் பற்றிப் பேசும் இந்தப் படத்தை இயக்கிய ராஜு முருகன் தனக்கு இதுவரை யாரும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்கிறார். "இந்தப் படத்தை இந்தியில் மறுபதிப்பு செய்யும் ஆசை இருக் கிறது. தெலுங்கிலும் மறுபதிப்பு செய்யச் சொல்லி கேட்கிறார்கள். தயாரிப்பாளர் தரப்பில் இருந்து அதற்கான சரியான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.