முத்துக்குமார் அரை மணி நேரத்தில் எழுதிய பாடல்

முத்துக்குமார் அரை மணி நேரத்தில் எழுதிய பாடல்

2 mins read
4564d2fc-0d0f-426b-89ff-638d48cf8816
-

மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக் குமார் 'மேல்நாட்டு மருமகன்' படத்துக்காக 33 நிமிடத்தில் ஒரு பாடலை எழுதிக் கொடுத்துள்ளார். சின்னத்திரை நடிகர் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் 'மேல்நாட்டு மருமகன்'. இதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரீயன் என்பவர் நாயகியாக அறிமுகமாகிறார். வி.எஸ்.ராகவன், அஞ்சலி தேவி, அசோக்ராஜ், சாத்தையா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை எம்.எஸ்.எஸ். என்பவர் இயக்கியிருக்கிறார். கிஷோர் குமார் இசையமைப்பில் உருவாகும் பாடல்களில் மறைந்த நா.முத்துக்குமாரும் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

அதிலும் முப்பத்து மூன்று நிமிடங்களில் அந்தப் பாடலை எழுதிக் கொடுத்துள்ளார் முத்துக் குமார். முதலில் இந்தப் படத்திற்காக நா.முத்துக்குமாரை பாடல் எழுத இயக்குநர் அணுகிய போது அவர் நான் அமெரிக்கா போகிறேன், வந்து எழுதுகிறேன். அவசரம் என்றால் வேறு யாரையாவது எழுதச்சொல்லி வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினாராம். ஆனால், இயக்குநர் எம்.எஸ்.எஸ்., அதை ஏற்க வில்லையாம்.

"நீங்கள்தான் இந்தப் பாடலை எழுதித் தரவேண்டும் என்று நா.முத்துக்குமாரை வற்புறுத்தி னேன். படப்பிடிப்பு நெருங்கி விட்டதால், உடனடியாக பாடல் தேவைப்பட்டது. எங்களது இக் கட்டான நிலைமையைப் புரிந்து கொண்ட முத்துக்குமார் தனது காரில் என்னை அழைத்துச் சென்று முப்பத்து மூன்றே நிமிடத்தில் அந்தப் பாடலை எழுதிக் கொடுத்தார்," என்கிறார் இயக்குநர். "அவர் செய்த இந்த உதவியை மறக்கவே இயலாது. அவரது தொழில் பக்தியும் அபாரத் திற மையும் எங்களை அசர வைத்தன. அவர் எழுதிய பாடல் இந்தப் படத்தின் வழி ரசிகர்களைச் சென்றடைந்து பெரியளவில் பேசப்படும்," என்கிறார் பட நாயகன் ராஜ்கமல்.

'மேல்நாட்டு மருமகன்' படத்தில் ராஜ்கமல், ஆண்ட்ரீயன்.