'மன்னர் வகையறா' படத்திற்காக உடல் எடையைக் கூட்டும் கயல் ஆனந்தி

'மன்னர் வகையறா' படத்திற்காக உடல் எடையைக் கூட்டும் கயல் ஆனந்தி

1 mins read
7cbb041a-c429-4881-87d0-8e44e7c7e42b
-

விமல் நாயகனாக நடிக்கும் 'மன்னர் வகையறா' என்ற படத்தில் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெண்ணாக நடித்து வருகிறார் கயல் ஆனந்தி. இந்தப் படத்தில் சட்டக் கல்லூரி மாணவராக நடிக்கிறார் விமல். கிராமத்து தோற்றத்தில் நடிக்க பல புதுமுக நடிகைகளைத் தேர்வு செய்துள்ளார் இப்படத்தின் இயக்குநர். எனினும் அவருக்குத் திருப்தி கிடைக்க வில்லை. "எதற்கு புதுமுக நடிகையை நடிக்க வைத்து சிரமப்பட வேண்டும்? ஏற்கெனவே பல படங்களில் கிராமத்துப் பெண் வேடங்களில் நடித்துள்ள ஆனந்தியையே நடிக்க வைத்துவிடலாம்," என்றாராம் தயாரிப்பாளர்.

இதையடுத்து சற்றே உடல் எடையைக் கூட்டுமாறு ஆனந்தியிடம் கூறியுள்ளார் இயக்குநர். இதுவரை தனது ஒல்லிக்குச்சி உடற்கட்டைக் காரணம் காட்டி கவர்ச்சிக்குக் கட்டுப்பாடு விதித்து வந்த ஆனந்தியும் அதிகம் சாப்பிட்டு ஓரளவு உடல் பெருத்துள்ளார்