அண்மையில் ஒரு நாயை மாடியிலிருந்து இரு இளையர்கள் தூக்கி வீசிய காட்சி சமூக வலைத்தளங்கள் வழி பரவி பெரும் சர்ச்சை ஆனது. விலங்கு கள் நல ஆர்வலர்களின் எதிர்ப்பு காரணமாகச் சம்பந்தப்பட்ட இளையர்கள் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இந்த உண்மைச் சம்பவத்தைப் போலவே சாயல் கொண்ட ஒரு கதையை 'மியாவ்' என்று தலைப்பு வைத்து இயக்கியிருக்கிறார் சின்னா பழனிச்சாமி. தலைப்பே வித்தியாசமாக உள்ளதே?
"பொதுவா பூனைகள் பம் மும். புலிகள்தான் உறுமும். எங்க ளுடைய 'மியாவ்' பம்ம வேண்டிய நேரத்தில் பம்மி, உறும வேண்டிய நேரத்தில் உறுமும். இப்படத்தின் கதைக்களம் இதுவரை தமி ழில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே வந்ததில்லை. நான்கு இளையர்கள் ஒரு பூனையைத் துன்புறுத்துகிறார்கள். பாதிக்கப்பட்ட பூனை அவர்களைப் பழிவாங்குவதுதான் படத்தின் ஒரு வரிக் கதை. மிகவும் மிரட்டலாக இப்படம் இருக்கும்.
குழந்தைகள் படமோ?
"நிச்சயமாக அப்படிச் சொல்ல முடியாது. இது ஒரு நகைச்சுவை கலந்த திகில் படம். ஆறிலிருந்து அறுபது வயது வரை என அனைவரும் ரசிக்கலாம். "தயாரிப்பாளர் வின்சென்ட் அடைக்கலராஜிடம் இந்தக் கதையைச் சொன்னதுமே அவர் திரைப்படமாக மனசுக்குள் ஓட்டிப் பார்த்து உடனே சம்மதம் தெரிவித்தார். இது ஆபத்தான கதை என்று அவர் யோசித்து தயங்கி இருந்தார் எனில் 'மியாவ்' சாத்தியமே ஆகியிருக்காது.
"எனது தயாரிப்பாளருக்குச் சினிமாவில் நீண்ட அனுபவம் உள்ளது. அவர் நினைத்திருந்தால் முன்னணி நாயகனை வைத்தும் கூட படம் எடுக்கலாம். எனக்கும் விளம்பரத்துறையில் போதுமான அனுபவம் உண்டு. எதையும் 30 விநாடிகளில் சொல்ல வேண்டிய வித்தையைக் கற்றுக் கொண்ட வன். நான் எடுத்த விளம்பரங்களே என் திறமையைச் சொல்லும்.

