சேது - சுருதி நடிக்கும் 'ஆளுக்கு பாதி 50 - 50'

சேது - சுருதி நடிக்கும் 'ஆளுக்கு பாதி 50 - 50'

1 mins read
18d52335-60a8-472b-a9b8-eade969183b9
-

'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'வாலிபராஜா' ஆகிய படங்களின் நாயகன் சேது தற்போது கதாநாயகனாக நடிக்கும் படம் 'ஆளுக்கு பாதி 50-50'. இதில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர் '144' படத்தில் நடித்த சுருதி ராமகிருஷ்ணன். அலெக்ஸ் என்பவர் கதை எழுத அறிமுக இயக்குநர் கிருஷ்ண சாய் திரைக்கதை எழுதி இயக்குகிறார். ரஞ்சித் குமார் தயாரிக்கிறார். "இன்று இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் தங்கள் கவலைகளை மறந்து வாய்விட்டுச் சிரித்து மகிழ வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் திரையரங்கம் சென்று படம் பார்க்கிறார்கள். ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை நான் இப்படத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளேன். மயில்சாமி, பட்டிமன்றம் ராஜா, மதன்பாபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன், யோகி பாபு என நகைச்சுவை பட்டாளமே இதில் உள்ளது. சென்னை, கும்ப கோணம் பகுதிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது," என்கிறார் இயக்குநர் கிருஷ்ண சாய்.