இயக்குநர், நடிகர், கதாசிரியர் என சினிமாவில் பன்முகம் கொண்ட பார்த்திபனுக்கு அமெரிக்க அமைப்பு ஒன்று விருது வழங்கி கௌரவித்துள்ளது. சினிமாவில் மாறுபட்ட சிந்தனையுடன் பணிபுரிந்து வரும் அவருக்கு 'மாறுபட்ட இயக்குநர்' (டிஸ்டிங்குய்ஷ்ட்) என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. பார்த்திபனின் சினிமா படைப்புகளைப் பாராட்டி ஒரு பாராட்டு உரையும் வெளியிடப்பட்டிருப்பது அவருக்குக் கூடுதல் உற்சாகத்தையும் பெருமையையும் அளித்துள்ளதாம். அந்த அமைப்பு வழங்கியுள்ள விருதுப் பட்டயம் தங்கமுலாம் பூசப்பட்ட சான்றிதழ் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவலைத் தனது முகநூல் பக்கத்தில் 'ஏழைக்கேத்த எள்ளுருண்டை' என்று வித்தியாசமாகப் பதிவு செய்துள்ளார் பார்த்திபன்.
பார்த்திபனுக்கு அமெரிக்க அமைப்பு ஒன்று விருது
1 mins read
-

