ஏமாற்றத்தில் இமான் அண்ணாச்சி

ஏமாற்றத்தில் இமான் அண்ணாச்சி

1 mins read
759d8629-b338-4ebf-8962-90bf4af8607b
-

அண்மையில் வெளிவந்த சில படங்களில் கதாநாயகனுடன் படம் முழுவதும் வரும் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார் இமான் அண்ணாச்சி. பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'தொடரி' படத்தில் முக்கிய நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். படம் முழுவதும் ரயிலுக்குள் நடக்கும் கதை என்பதால் நகைச்சுவைக்காக இமான் அண்ணாச்சி, தம்பி ராமைய்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை அதிகமாகப் படத்தில் வைத்தாராம் பிரபுசாலமன்.

இப்போது இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்து தனுஷ் படத்தைப் பார்த்தபோது, நகைச்சுவைக் காட்சிகள் அதிகமாக இருப்பதாக நினைத்தாராம். அதனால் பல காட்சிகளை வெட்டும்படி சொல்லி விட்டாராம் தனுஷ். அப்படி அவர் சொன்னதில் தம்பி ராமையா காட்சிகள் தப்பின. இமான் அண்ணாச்சி உள்ளிட்ட மேலும் சில நகைச்சுவை நடிகர்கள் நடித்த காட்சிகள் நிறையவே கத்தரிக்கு இரையாகிவிட்டனவாம். அதனால் பிரபு சாலமன் படத்தில் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த நகைச்சுவை வேடம் என்ற மகிழ்ச்சியில் இருந்த இமான் அண்ணாச்சி, தான் நடித்த பல காட்சிகள் கத்தரிக்கப்பட்ட செய்தி அறிந்து வெளியில் சொல்லமுடியாத வேதனையில் இருக்கிறாராம்.