அமலா பாலுக்கு தமிழில் வாய்ப்பில்லை

அமலா பாலுக்கு தமிழில் வாய்ப்பில்லை

1 mins read
6a38d125-541d-49e6-96d5-a2b89038c854
-

அமலா பாலைத் தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய சில தயாரிப்பாளர்கள் முடிவு செய்த வேளையில் அவர் விவாகரத்துக் கோரினார். இந்நிலையில் ஏ.எல்.விஜய்யின் தந்தை அழகப்பனின் நட்பை மதித்து தயாரிப்பாளர்கள் அமலாவுக்குத் தமிழில் வாய்ப்பு அளிக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். அமலா பால் இயக்குநர் விஜய்யை விவாகரத்து செய்வதற்கு முக்கியக் காரணம் அவருடைய தாய்தானாம். தாய்க்குலம்தான் அவரின் மனதைக் கெடுத்துப் படங்களில் தொடர்ந்து நடிக்க வற்புறுத்தியதாக தற்பொழுது செய்திகள் பரவலாக வெளிவருகின்றன. ம.க.பா.ஆனந்த் தன்னுடைய படத்தில் அமலா பாலை நடிக்க அழைத்திருக்கிறார். முன்னணி நாயகர்களோடு நடித்த நான் வளரும் நடிகர்களுடன் நடிக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டாராம்.