தற்கொலைக்கு முயன்ற துணை நடிகருக்கு வி‌ஷால் உதவி

தற்கொலைக்கு முயன்ற துணை நடிகருக்கு வி‌ஷால் உதவி

1 mins read
c80e30f5-565a-4726-8546-3a2209dfdf2e
-

'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'சகுனி', 'டமால் டுமீல்', 'கள்ளப்படம்' உட்பட சுமார் 40 படங்களில் துணை நடிகராக நடித்திருப்பவர் இளவரசன். சரியான திரை வாய்ப்புகள் இல்லாததால் வறுமையில் வாடிய இவரால் தனது குடும்பத்தினரைக் காப்பாற்ற முடியவில்லை. அதனால் இவரின் மனைவி கோபித்துக்கொண்டு தனியாகச் சென்றதோடு விவாகரத்தும் கோரியிருக்கிறார். அதனால் மனம் வருந்தி, 'துணை நடிகர்களைக் காப்பாற்றுங்கள்' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதைக் கேள்விப்பட்ட விஷால் தனது 'தேவி அறக்கட்டளை' மூலம் 10 ஆயிரம் ரூபாயைத் தனது ரசிகர் மன்றச் செயலாளர் ஹரியின் மூலம் இளவரசனுக்கு மருத்துவ உதவிக்காக வழங்கினார். இளவரசனின் மனக்குமுறலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் விஷால் தெரிவித்திருக்கிறார்.