இயக்குநர் சமுத்திரகனியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருக்கும் சிவகார்த்திக் தற்போது இயக்கும் படம் 'கடலை போட பொண்ணு வேணும்'. தொலைக்காட்சி தொகுப்பாளர் அஸார் கதாநாயகனாக இதில் அறிமுகமாகிறார். நாயகி மனீஷா. "இந்த உலகில் உள்ள பிரச்சினைகளுக்குக் காரணமாக இருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று மண் ஆசை. மற்றொன்று பெண் ஆசை. மதுரையில் வசிக்கும் நாயக னுக்குத் தன் நண்பர்களைப் போல் பெண்களுடன் நட்பு வளர்க்க வேண்டும் என்று ஆசை.
இதற்காக சென்னைக்கு வருகிறான். அங்கு நாயகனின் விருப்பம் நிறைவேறுகிறதா என்பதுதான் கதை. இதை அனைத்துத் தரப்பினரும் ரசிக்கக்கூடிய வகையில் நகைச்சுவையாக உருவாக்கி இருக்கிறோம். அதனால் தான் இதற்கு 'கடலை போட பொண்ணு வேணும்' என்ற தலைப்பு வைத்தோம். படவா கோபி, லொள்ளு சபா சுவாமிநாதன், தினா என நகைச்சுவைப் பட்டாளமே நடித்திருக்கிறது," என்கிறார் சிவகார்த்திக்.

