'காதல்' படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமான சந்தியாவை நினை விருக்கிறதா? தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று பெரிதாக ஒரு வலம் வந்தவர், கடைசியாக 'கத்துக்குட்டி' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். கடந்த சில ஆண்டுகளாகத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரோடு ரகசியக் காதலில் ஈடுபட்டிருந்தவர், இரு வீட்டார் சம்மதத்தோடு அவரைக் கடந்த ஆண்டு இறுதியில் குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி முழுமையான இல்லற வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவர் ஏற்கனவே நடித்த 'வெறி' (திமிரு-2) என்கிற படம் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கிடையே சந்தியா தாய்மையடைந்துள்ளார். செப்டம்பர் 26, அவருக்குப் பிறந்தநாள். அன்றே தன் குழந்தையைப் பெற்றெடுக்க விரும்புவதாக மருத்துவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறாராம்.

