வில்லனாகவும் அசத்தும் சேதுபதி

வில்லனாகவும் அசத்தும் சேதுபதி

1 mins read
087ff504-c91b-4336-b46c-6f09d85292d9
-

கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி வில்லனா? டி.ராஜேந்தர் வில்லனா எனக் குழப்பம் நீடித்து வருகிறது. இப்படத்தின் கதாநாயகியாக மலையாளத்தில் வெளிவந்த 'பிரேமம்', தமிழில் 'காதலும் கடந்து போகும்' ஆகிய படங்களில் நடித்த மடோனா செபஸ்டியான் நடித்து வருகிறார். அண்மையில் தொடங்கிய இப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், அண்மைய பேட்டி ஒன்றில் கே.வி.ஆனந்த், இந்தப் படத்தின் வில்லன் யார் என்பது குறித்துப் பதில் அளித்தார். "விஜய் சேதுபதி, டி.ஆர். இருவருமே வில்லத்தனம் செய்வார் கள். அதேபோல் கதாநாயகனைப் போலவும் செயல்படுவார்கள். எனவே படத்தின் முடிவில்தான் யார் வில்லன்? என்பது தெரியவரும். அதைப் படம் பார்க்கும்போது ரசிகர்களே தெரிந்து கொள்வார்கள்," என்கிறார் கே.வி.ஆனந்த்.

இப்படத்தின் முதற்கட்டப் படிப் பிடிப்பு நிறைவடைந்துள்ளதை அடுத்து, இரண்டாம் கட்டப் படப் பிடிப்பைத் தென் அமெரிக்காவில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அங்கு விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டியான் இருவ ரும் இணைந்து நடிக்கும் சில காட்சிகளையும் ஒரு பாடலையும் படமாக்க உள்ளதாகக் கூறப்படு கிறது. மடோனா செபஸ்டியான் இந்தப் படத்தின் மூலம் முதன் முதலாக வெளிநாட்டுப் படப்பிடிப் பில் பங்கேற்க உள்ளாராம். இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் மிகப் பிரம்மாண்ட மாகத் தயாரிக்கிறது. வித்தியாசமான கதைக்களம் என்பதால் இப்படத்துக்கு விநி யோகிப்பாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறதாம்.

டி.ராஜேந்தர், விஜய் சேதுபதி, இயக்குநர் கே.வி.ஆனந்த்.