விதார்த்: என்னை மாற்றிக் கொள்வேன்

விதார்த்: என்னை மாற்றிக் கொள்வேன்

2 mins read
b5537838-94d4-40d6-9615-63190e6c5bee
-

சினிமாவில் சில நடிகர்கள் வருவதும் மார்க்கெட் இழந்து போவதும் வழக்கமானதுதான். அதில் சில நடிகர்கள் மட்டும்தான் தொடர்ந்து போராடி தங்கள் இடத்தைத் தக்கவைக்க முயற்சிக்கின்றனர். அந்த வகையில், எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்குள் வந்து வெற்றி பெற்ற நடிகர் விதார்த். அவர் நடித்து வெளியாக உள்ள 'குற்றமே தண்டனை' படம் பற்றியும் தன்னைப் பற்றியும் அண்மைய பேட்டியில் விவரித்துள்ளார். இடையில் உங்களைப்பற்றி செய்தியே இல்லையே?

"நான் எங்கும் போகவில்லை, சினிமாவுக்குள்தான் இருக்கிறேன். 'காக்கா முட்டை' இயக்குநர் மணி கண்டனின் இயக்கத்தில், 'குற்றமே தண்டனை' படம் வெளியாக உள்ளது. அதற்குப் பின்னர், 'குரங்கு பொம்மை', 'ஒரு கிடாயின் கருணை மனு' என அடுத்தடுத்து படங்கள் வர உள்ளன. சற்றே இடைவெளி ஏற்பட்டாலும் நல்ல படங்களில் நடிப்பதுதான் நல்லது. அதனால் தான் இந்த அமைதியும் இடைவெளியும். 'குற்றமே தண்டனை' எதைப் பற்றிப் பேசப் போகிறது? "குற்றம் செய்த யாராக இருந்தாலும் தண்டனை உண்டு என்பதைப் பற்றிப் பேசும் படம் இது. ஒருவகையில் திகில் படம், நவீன பின்னணியில் சொல்கிறோம். இந்தப் படம் வெளியானதும் நிச்சயம் விவாதத்துக்கு உள்ளாகும்.

இந்தப் படத்துக்கு ப் பாடல் கிடையாது. ஆனால் இளையராஜாவின் பின்னணி இசை மட்டுமே படத்தைத் தூக்கி நிறுத்தும். தற்போது புதுமுகங்கள் படையெடுப்பு அதிகமாக உள்ளதே? "புதுமுகங்களின் வருகை அதிகரித்துள்ளது என்பது உண்மைதான். இதற்கு முன் கதைகள் சரியாக தேர்வு செய்யவில்லை. இப்போது தான் நல்ல கதைகள் கிடைக்கின்றன. இனி ஆண்டுக்கு ஒரு படம் நடித்தாலும் அது மக்கள் கொண்டாடும் படமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். புதுமுகங்கள் அதிகமாக வந்தால்தான் போட்டி அதிகமாக இருக்கும். நிலையான இடத்தை தக்க வைக்க நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். நீங்கள் தயாரிப்பாளரானது பற்றி? "நாமும் ஏதாவது செய்ய வேண்டுமே என்ற ஆர்வம் தான் இதற்குக் காரணம். நாம் நடிக்க ஆசைப்படும் படங்களை நாமே தயாரித்தால் என்ன என்ற கேள்விதான் படங்களைத் தயாரிக்கத் தூண்டியது. மற்றபடி, வியாபார நுணுக்கங்கள் இன்னும் தெரியவில்லை. யாருமே எதையும் தெரிந்து கொண்டு சினிமாவுக்கு வருவது இல்லை. அனுபவங்கள் மூலமாகவே கற்றுக் கொள்கின்றனர்.