தனது உடல்நிலை குறித்துப் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தான் நலமாக இருப்பதாகவும் பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா கூறியுள்ளார். தற்போது 70 வயதாகும் இவர் தமது கணவரின் மறைவுக்குப் பிறகு கேரள மாநிலம் ஆலப்புழையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது உடல் நிலை பற்றி நேற்று முன்தினம் திடீர் வதந்திகள் பரவியது. ஆனால் தான் நலமாக இருப்பதாகவும், தனது உடல்நிலை குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி என்றும் கே.ஆர்.விஜயா தெரிவித்துள்ளார். விரைவில் சென்னை வர இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கே.ஆர்.விஜயா: நலமாக உள்ளேன்
1 mins read
-

