தமிழில் வசனம் பேசத்தெரியாத நாயகிகளால் சிறப்பாக நடிக்க முடியாது என்று கூறியுள்ளார் நடிகர் விக்ரம் பிரபு. "தமிழ் பேசத் தெரிந்த நாயகி களுடன் நடிப்பது செளகரிய மானது. தமிழில் கொடுக்கும் வசனத்தைப் புரிந்துகொண்டு பேசுபவர்களாக நாயகிகள் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட நடிகைகளால்தான் கதையை உள் வாங்கி சிறப்பாக நடிக்கமுடியும். "தமிழ் பேசத் தெரியாத நடி கைகள் எழுதிக்கொடுத்த வச னத்தை எப்படிப் பேசுவது என்ப தில்தான் கவனமாக இருப்பார்கள்.
சிறப்பாக நடிக்கவேண்டும் என் பதில் அவர்களுக்கு சிந்தனை இருக்காது," என்கிறார் விக்ரம் பிரபு. விக்ரம் பிரபு-, ஷாம்லி ஜோடி யாக நடித்துள்ள படம் 'வீர சிவாஜி'. ஜான் விஜய், ரோபோ சங்கர், யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோ தினி ஆகியோரும் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கணேஷ் விநாயக் இயக்கி உள்ளார். 'வீர சிவாஜி' படத்தின் பாடல், 'டிரைலர்' வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரை யரங்கில் நடந்தது. இதில் கதா நாயகன் விக்ரம் பிரபு, தயாரிப் பாளர் நந்தகோபால், இசையமைப் பாளர் இமான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து விக்ரம் பிரபு செய்தியாளர்களிடம் பேசினார். "வீர சிவாஜி ஜனரஞ்சகமான படமாகத் தயாராகி உள்ளது. ஊரையே கொள்ளையடித்து வாழும் ஒருவனிடம் இருந்து மக்களைக் காப்பாற்றப் போராடி வெற்றி பெறும் வீரமான இளை ஞனைப் பற்றிய கதை. "இதில் நான் டாக்சி ஓட்டியாக வருகிறேன். கள்ள நோட்டு விஷயங்களும் அன்றாடம் ஒரு ஓட்டுநரைச் சுற்றி நடக்கும் சம்பவங்களும் படத்தில் இருக் கும். அதிரடி, நகைச்சுவையுடன் ஜாலியான படமாக வந்துள்ளது.
"காட்சிகள் விறுவிறுப்பாக நகரும். இமான் சிறந்த பாடல் களைக் கொடுத்திருக்கிறார். ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகி ஆகியுள்ள ஷாம்லி தமிழ் பேசக்கூடியவர் என்பதால் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்," என்று கூறினார் விக்ரம் பிரபு.
'வீர சிவாஜி' படக்காட்சியில் விக்ரம் பிரபு, ஷாம்லி.

