'ஆரம்பமே அட்டகாசம்' படக் குழுவினருக்கு விஜய் சேதுபதி வாழ்த்து

'ஆரம்பமே அட்டகாசம்' படக் குழுவினருக்கு விஜய் சேதுபதி வாழ்த்து

1 mins read
6fcd7923-fa7b-4591-9a32-2779cf83939d
-

'லொள்ளுசபா' புகழ் ஜீவா நடிக்கும் 'ஆரம்பமே அட்டகாசம்' படத்தின் முன்னோட்டத்தை இன்று விஜய் சேதுபதி வெளியிடுகிறார். இப்படத்தின் முதல் சுவரொட்டியையும் அவர்தான் வெளியிட்டார். அது மட்டுமல்ல, இப்படத்தின் இயக்குநர் ரங்கா முன்பு உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது அவரைப் பற்றி விஜய் சேதுபதிக்கு நன்கு தெரியுமாம். "ரங்கா நல்ல திறமைசாலி. அவர் வெற்றி பெற வேண்டும். இப்படத்தின் தலைப்பைப் போலவே, இப்படக் குழுவினருக்கு எல்லாம் அட்டகாசமாக அமைய நான் வாழ்த்துகிறேன்," என்கிறார் விஜய் சேதுபதி. இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் மிதக்கின்றனர்.