விஜய் நடிக்கும் 'பைரவா'

விஜய் நடிக்கும் 'பைரவா'

1 mins read
9a441812-c71c-48a5-9831-2383e5f6a208
-

விஜய் நடித்து வரும் 60ஆவது படத்திற்கு 'பைரவா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப் படத்தின் முதல் சுவரொட்டி வெளியானதை யடுத்து படத் தலைப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2007இல் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த படம் 'அழகிய தமிழ் மகன்'. இப்படத்தை இயக்கியவர் பரதன். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் உருவான படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. விஜய் நடிக்கும் 60ஆவது படம் என்பதால் அவரது ரசிகர் கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண் டிருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு பெயரிடப்படாமலேயே படப்பிடிப்பு நடை பெற்று வந்தது. இந் நிலையி ல் 'பைரவா' என்ற பெயருடன் இப்படத் தின் முதல் சுவ ரொட்டி நேற்று வெளியாகியுள்ளது. முதல் சுவரொட்டி ரசிகர்களை வெகு வாக கவர்ந்துள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும், டேனியல் பாலாஜி, ஹரிஷ் உத்தமன், சதீஷ், ஜெகபதி பாபு, சுதான்‌ஷூ பாண்டே, ஆடுகளம் நரேன், ஸ்ரீமான், அபர்ணா வினோத், ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க விஜயா புரொடெக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.