சின்னத்திரைக்கு வருகிறார் சினேகா

சின்னத்திரைக்கு வருகிறார் சினேகா

1 mins read
681aa6a7-8dc6-465d-8943-2471fc5ae2e8
-

அண்மைக்காலம் வரை சன் தொலைக் காட்சியின் தரமிக்க படைப்புகளாக விளங்கின ராடன் டி.வியின் தொடர்கள். சன் தொலைக்காட்சி நிர்வாகம் ராடன் நிறுவனத்திற்கும் அதன் உரிமையாளர் ராதிகாவுக்கும் எல்லா வகையிலும் முன்னு ரிமையும் முக்கியத்துவமும் அளித்தது. இந்நிலையில் ராதிகாவுக்கும் சன் தொலைக்காட்சிக்குமான பந்தம் விரைவில் முடிவுக்கு வருவதாகக் கூறப்படுகிறது. ராதிகாவின் இடத்தை நிரப்ப வேண்டும் என்றால் அதற்கு சரியான நபர் யார் என்று எப்படி எப்படியோ யோசித்தவர்களுக்கு மனதில் தோன்றியவர் குஷ்புதானாம்.

உடனே அவரைத் தொடர்பு கொண்டு பேச, விதவிதமான நிகழ்ச்சிகளால் 'சன்'னுக்கு துணை நிற்க சபதம் போட்டுவிட்டாராம் குஷ்பு. அவரது முதல் அடியே அமர்க்களமாக உள்ளதாகக் கேள்வி. திருமணமான நாளில் இருந்தே 'சின்னத்திரைக்கு வந்துவிடுங்கள்' என்று சினேகாவை நச்சரித்து வந்த சினிமாக்காரர்களுக்கு பதிலளிக்காத சினேகா, குஷ்பு அழைத்ததும் 'சரிக்கா' என்று கூறிவிட்டாராம். விரைவில் இந்த அறிவிப்பு முறைப்படி வரலாம். இதற்கிடையில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சினேகா.