விஷால், தமன்னா இணைந்து நடித்துள்ள படம் 'கத்திசண்டை'. "நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதில் மீண்டும் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார் வடிவேலு. சூரியும் இருப்பதால் நகைச்சுவைக்குப் பஞ்சமே இருக்காது. ரசிகர்கள் வயிறு, சிரித்துச் சிரித்தே புண்ணாகும் என்பதற்கு உத்தரவாதம் தருகிறோம்," என்கிறார் இயக்குநர் சுராஜ். விஷால்தான் இப்படத்தின் இணைத் தயாரிப்பாளர். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். படம் மிக விரைவில் வெளியீடு காண்கிறது.
விரைவில் வெளியீடு காண்கிறது 'கத்திசண்டை'
1 mins read
-

