தமிழில், 'பிடிச்சிருக்கு', 'கண்ணா லட்டு தின்ன ஆசையா', 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா', 'வாலிபராஜா', 'பயம் ஒரு பயணம்' ஆகிய படங்களில் நடித்தவர் விசாகா சிங். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகை எனப் பெயர் வாங்கியுள்ளார். அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப் பம் இல்லையாம். எண்ணிக்கையை விட தரம் தான் முக்கியம் என்பதே விசாகாவின் கொள்கையாம். "ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் அது மற்றவர்க ளால் பாராட்டப்படுகிறதா எனப் பார்க்க வேண் டும். அது ஒருபுறம் இருக்க, நான் நடிக்கும் பட மும் அதில் ஏற்றிருக்கும் பாத்திரமும் தனிப்பட்ட வகையில் என்னைத் திருப்திப்படுத்துகிறதா? என்பதும் முக்கியம். பந்தயத்தில் ஓடும் பெண் அல்ல நான்.
திரைப்படங்களைத் தவிர சொந்தமாகத் தொழில் செய்கிறேன். அதிலும் என் கவனம் இருக்கிறது," என்கிறார் விசாகா. பேயாக நடித்த அனுபவம் குறித்து?
"அண்மையில் வெளியான 'பயம் ஒரு பயணம்' படத்தில் பேய் வேடத் தில் நடித்தது உண்மையிலேயே வித்தியாசமான அனுபவமாக இருந்தது. மூணாறு பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அதுவும் இரவு நேரங்களில் படப்பிடிப்பு என்றாலே, படக்குழுவினர் பயந்து நடுங்குவார்கள்.
"கடும் குளிர். பேய் வேடத் துக்கு ஒப்பனை போடவே நிறைய நேரம் ஆகும். வழக்கமான கதாபாத்திரங்களில் நடிப்பதை விட கூடுதல் கவனம் செலுத்தி பேய் வேடத்தில் நடித்தேன். பயமுறுத்த வேண்டும் என்றால் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டு நடித்தால்தான் முடியும். தமிழ்ப் படங்களில்
இடைவெளி விடுகிறீர்களே?
"நான் தமிழில் மட்டுமே நடிக்கவில்லை. இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் என எல்லா மொழிகளிலும் நடிக்கிறேன். மேலும் வெளிநாட்டில் சொந்தமாகத் தொழில் செய்வதால் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதனால்தான் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க முடியவில்லை.
நடிகைகளின் போட்டியால் வாய்ப்பு வரவில்லையா?
"அப்படிச் சொல்ல முடியாது. எனக்கு வர வேண்டிய வாய்ப்பு கள் கண்டிப்பாக வந்தே தீரும் என்ற நம்பிக்கை உண்டு. அதன்படி வாய்ப்புகள் தேடி வந்தன. நிறைய மொழிகளில் நடித்தாலும், தமிழில் நடிப்பதற்கு தனிக் கவனம் செலுத்து கிறேன். பலவித வேடங்களில் நடிக்க ஆர்வத்துடன் காத்தி ருக்கிறேன்," என்கிறார் விசாகா.

