'குற்றம் 23' என்ற படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக தென்றல் என்ற ஆசிரியை வேடத்தில் நடிக்கிறார் மகிமா. இந்தப் படம் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த உதவி செய்திருப்பதாகக் கூறுகிறார். "கேரளாவில் நகரத்துப் பெண்ணாக வளர்ந்த நான் கிராமத்துப் பெண்ணாக நடிக்க மிகவும் சிரமப்பட்டேன். இதைப் புரிந்துகொண்ட இயக்குநர் ராஜ்குமார் படப்பிடிப்பு நடந்த திருவண்ணாமலை பகுதியிலுள்ள கிராமத்துக்குச் சென்று அங்குள்ள பெண்களிடம் பேசிப் பழகச் சொன்னார்.
"அதன்படி ஒரு வாரம் அந்தக் கிராமத்தில் தங்கி, அங்குள்ள பள்ளிக்குச் சென்றதுடன் அங்கிருந்த பெண்கள் எப்படிப் பேசுகிறார்கள், பழகுகிறார்கள் என்றும் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு என்னால் இயல்பாக நடிக்க முடிந்தது" என்று சொல்லும் மகிமாவுக்கு தமிழில் பின்னணி (டப்பிங்) பேச ஆசையும் ஆர்வமும் உள்ளதாம். எனினும், அவரது பேச்சில் மலையாள வாடை வீசுவதால், வேறொருவர் இவருக்குப் பின்னணி குரல் கொடுத்து வருகிறார். அடுத்து வெற்றிமாறன் தயாரிப்பில் தினேஷ் ஜோடியாக 'அண்ணனுக்கு ஜே' படத்தில் நடிக்கிறார் மகிமா.

