பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைய திரைப்பட இயக்குநர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண் டும் என இயக்குநர் வசந்தபாலன் அறிவுரை கூறியுள்ளார். 'பச்சை என்கிற காத்து' படத்தை இயக்கிய இயக்குநர் கீரா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள படம் 'மெர்லின்'. ஜே.எஸ்.பி. பிலிம்ஸ் ஸ்டூடியோ தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணுபிரியனும் கதாநாயகியாக ஒரு சில தெலுங்கு, கன்னடப் படங்களில் தோன்றியுள்ள அஸ்வினியும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் தங்கர்பச்சான், மனோபாலா, மு.களஞ்சியம், 'ஆடு களம்' முருகதாஸ், 'லொள்ளு சபா' ஜீவா, சிங்கம் புலி, 'கயல்' தேவராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். அட்ட கத்தி தினேஷ் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முன்னோட் டம், விளம்பரப் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், தங்கர்பச்சான், வசந்தபாலன், மகிழ் திருமேனி, மீரா கதிரவன், தாமிரா நடிகர்கள் ஆரி, சிங்கம் புலி உட்பட பலர் கலந்துகொண்டனர். வசந்தபாலன் பேசுகையில், "நண் பன் நா. முத்துகுமார் இறந்த பின்னர் சிரிக்க மறந்திருந்தேன். சிங்கம் புலியின் பேச்சு என்னை சிரிக்க வைத்தது. மிக மோசமான கால கட்டத்தில் நாம் நின்றுகொண்டிருக் கிறோம். ஒரு தலைக்காதலால் பெண்களைக் கொலை செய்கிறார்கள். இந்தச் சூழலில் இயக்குநர்கள் பொறுப்பாக இருக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்," என்றார்.

