மீண்டும் சிரிக்க வைக்கும் வடிவேலு

மீண்டும் சிரிக்க வைக்கும் வடிவேலு

1 mins read
375e49a7-da1b-4648-9907-71c4015330e1
-

அண்மைக்காலமாக நாயகனாக மட்டுமே நடிப்பேன் எனப் பிடி வாதம் பிடித்து வந்தார் வடிவேலு. சில தோல்விகள் அவரது மனதை மாற்றியதை அடுத்து தற்போது நகைச்சுவைக் கதா பாத்திரத்திலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இதற்கு நடி கர் விஷால்தான் காரணம் என் பது அனைவருக்கும் தெரியும். வடிவேலு மீண்டும் நகைச் சுவையில் பிரகாசிக்க வேண்டு மென அவரை நேரடியாக சந் தித்து வேண்டுகோள் விடுத்தார் அவர். மேலும், வடிவேலுவுக்கு கணிசமான தொகையை சம்பள மாக அளிக்கவும் ஏற்பாடு செய் தார். இந்த அன்பும் மெனக்கெட லும் வடிவேலுவை நெகிழ வைத்த தாம்.

சுராஜ் இயக்க, விஷால், தமன்னா நடித்துள்ள 'கத்தி சண்டை'யில் நீண்ட இடை வெளிக்குப்பிறகு வடிவேலு மீண் டும் நகைச்சுவையில் கலக்குகி றார். தற்போது படப்பிடிப்பு முடிந்து பின்னணிக் குரல், இசைப் பதிவு உள்ளிட்ட பணிகள் நடந்து வரு கின்றன. இதில் வடிவேலு தனக் குரிய காட்சிகளில் தீவிர கவனம் செலுத்தி நடித்திருக்கிறாராம். இக்காட்சிகளுக்கான 'டப்பிங்'கி லும் முழு ஈடுபாடு காட்டுகிறாராம். தனது வசனங்களை அவர் தனக்கே உரிய ஏற்ற இறக்கங்க ளோடு பேசியது படக்குழுவினரை சிரிப்பில் குலுங்க வைத்திருக்கி றது. 'கத்திசண்டை' எதிர்பார்ப்பு களை ஏற்படுத்தி உள்ளது.

'கத்திசண்டை' படத்தின் ஒரு காட்சியில் விஷால், வடிவேலு.