35 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள 'ரெமோ'

35 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள 'ரெமோ'

1 mins read
58932596-3595-410f-bf12-625488749be8
-

'மெரினா' படத்தில் அறிமுக மானபோது சிவகார்த்திகேயனை ஒரு தொகுப்பாளராகவேதான் சினிமா உலகமும் பார்த்தது. ஆனால், அதன்பிறகு அவர் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'எதிர் நீச்சல்' படங்களை அடுத்து 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நடித்தபோது கவனிக்கப் படும் முக்கிய நடிகராகிவிட்டார்.

ரஜினி முருகனுக்குப்பிறகு வியாபார ரீதியாக முன்னணி இடத்துக்கு வந்தார். அதையடுத்து அவர் நடித்த 'ரெமோ' படம் முதன்முறையாகப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரானது. அதோடு அடுத்த நிலைக்குச் செல்ல பெண் வேடத்திலும் நடித்துள்ளார். அப்படி அவர் நடித்துள்ள 'ரெமோ' படத்தை 50 கோடி வரை வியாபாரம் செய்துவிட வேண்டும் என்பதுதான் சிவகார்த்திகேயனின் முக்கியக் குறியாக இருந்தது. அதை முன்வைத்தே வியாபாரமும் பேசப்பட்டு வந்தது. ஆனால், 50 கோடி கொடுத்து வாங்கினால் நாங்கள் கல்லா கட்டமுடியாது என்று விநியோகிப்பாளர்கள் தரப்பில் கூறிவிட்டார்களாம்.

அதனால் இப்போது 35 கோடிக்கு 'ரெமோ' வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாம். இருப்பினும் அடுத்தபடியாக மோகன்ராஜா இயக்கத்தில் தான் நடிக்கும் படத்தை 50 கோடிக்கு வியாபாரம் செய்து மெகா நடிகர் பட்டியலில் இடம்பிடித்துவிட வேண்டும் என் பதை மனதில்கொண்டு செயல் படத் தொடங்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

தாதி வேடத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ்.