விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இருமுகன்' முதல் நாளில் மட்டும் அனைத்து வட்டாரங்களிலும் 13 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. எந்த விசேஷமும் இல்லாத ஒரு சாதாரண நாளில் வெளியாகி இவ்வளவு வசூலித்த விக்ரம் படம் 'இருமுகன்'தான் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளுக்கு மேல் இப்படம் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் மட்டும் முதல் நாள் வசூல் 5.5 கோடி ரூபாயை வசூலித்துள்ளது 'இருமுகன்'. கிட்டத்தட்ட தமிழகத்துக்கு இணையாக தெலுங்கில் இந்தப் படத்துக்கு வசூல் கிடைத்துள்ளது.
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மொத்தம் 4.75 கோடி ரூபாயும் கேரளாவில் ரூ 1.25 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் மட்டும் மொத்தம் 1.75 கோடி ரூபாய் களை வசூலித்துள்ளது. 'ஐ' படத்திற்குப் பிறகு ஷங்கர் இயக்காத ஒரு விக்ரம் படம் இந்த அளவு முதல் நாள் வசூல் பார்த் திருப்பது இருமுகனில் தான்.

