தனுஷின் 'வடசென்னை' படத்தில் அமலா பால் நடித்துக்கொண்டி ருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் சற்றும் சத்தம் இல்லாமல் மற்றொரு படத் திலும் அவர் நடித்து முடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சத்யராஜ் இரட்டை வேடத்தில் நடிக்கும் 'முருகவேல்' என்ற படத் தில்தான் அமலாபால் நடித்து உள்ளார். தமிழில் முன்னணி நாயகியாக இருந்த அமலா பால், இயக்குநர் விஜய்யைக் காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின் சில காலம் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், அண்மைக்காலமாக மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார்.
இதற்கிடையே விஜய்யும் அவரும் திருமண முறிவு வேண்டி நீதிமன்றத்தின் உதவியையும் நாடியுள்ளனர். மீண்டும் அமலா பால் நடிக்கத் தொடங்கியதால் தான் இந்தப் பிரிவு எனக் கூறப்படுகிறது. ஆனால், மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருக்கும் அமலா பாலுக்கு எதிர் பார்த்தபடி பட வாய்ப்புகள் அமைய வில்லை. இப்போதைக்குத் தனுஷ் நடிப்பில் உருவாகும் 'வடசென்னை' படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். வேறு எந்தப் பட வாய்ப்பு களும் அவரைத் தேடி வரவில்லை. இந்நிலையில் அவர் எந்த பரபரப்பும் இல்லாமல் விளம்பரமும் இல்லாமல் 'முருகவேல்' படத்தில் நடித்துள்ளார். இதில் அவர் சத்யராஜுக்கு ஜோடியாக நடித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
சத்யராஜ் இப்படத்தில் தொழிலதிபராகவும் அரசால் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்படப் புதிதாக ஏற்படுத்தப் பட்ட சிறப்பு அமைப்பின் தலைமை அதிகாரி யாகவும் இரட்டை வேடங்களில் வாழ்ந்து இருக்கிறார்.

