சார்லஸ்: அனைவருமே மறுபிறவி எடுத்ததாக உணர்கிறோம்

சார்லஸ்: அனைவருமே மறுபிறவி எடுத்ததாக உணர்கிறோம்

2 mins read
7d3f3bdc-d983-4a63-80c5-2ab0510bc61e
-

'நஞ்சுபுரம்', 'அழகு குட்டிச் செல்லம்' படத்தை இயக்கிய சார்லஸ் தற்போது இயக்கும் படம் 'சாலை'. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். பாடல்களும் இவரது கைவண்ணம்தான். 'எப்படி மனதிற்குள் வந்தாய்' படத்தில் நடித்த விஸ்வா இப்படத்தின் நாயகன். புதுமுகம் கிரிஷா நாயகியாக நடிக்கிறார். இதற்கு முன்பு 'அழகு குட்டிச் செல்லம்' படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந் தார். 'ஆடுகளம்' நரேன், ப்ரீத்தி வர்மா, ஆலன் ஜான் ஆகியோரும் உள்ளனர்.

'சாலை' படம் முழுக்க முழுக்க காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளது. அது வும் பெரும் பனிப்பொழிவு கொட்டும் காலத்தில் பல இடையூறுகளை எதிர் கொண்டு முழுப் படத்தையும் படமாக்கி யுள்ளோம். இதுவரையில், காஷ்மீரில் இந்திய சினிமாக்கள் பெரும்பாலும் சாதாரண தட்பவெப்பம் இருக்கும் கால நிலைகளில்தான் படமாக்கப்பட் டிருக்கின்றன. அதுவும் ஒரு சில பகுதிகளையோ காட்சியையோ படமாக்கிவிட்டு வந்துவிடுவார்கள்.

"ஆனால் 'சாலை' படம் தமிழ் திரைப்பட உலகில் மட்டுமல்ல, இந்திய திரையுலகில் கூட இதுவரை படமாக்கப் படாத ஆபத்தான கொட்டும் பனிப் பொழிவுகளுக்கு இடையே 45 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. "பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு இடையே மிகவும் சிரமப்பட்டுதான் பட மாக்க முடிந்தது. உயிரோடு ஊர் திரும்புவோமா என்ற பெரும் பீதியுடன் தான் அங்கிருந்த ஒவ்வொரு நாளையும் கழித்தோம். பொதுவாகப் பனி என்பதை அழகுக்காகவே படம்பிடிப்பர். "ஆனால் 'சாலை'யைப் பொறுத்த வரை பனி என்பதுதான் கதையின் திகிலூட்டும் அம்சம். "படம் பார்க்கும் போது ஒட்டுமொத்த காஷ்மீரின் அழகை அனுபவிக்க முடிந் தாலும் பனி என்ற பெரும் அரக்கன் உங்களைப் பயமுறுத்திக்கொண்டே இருப்பான். அழகான பனியின் கோலம் திகிலையும் ஏற்படுத்தும். "நாங்கள் படப்பிடிப்பு முடிந்து நல்லபடியாகத் திரும்பியதே பெரிய விஷயம். எங்கள் ஒவ்வொருவருக்கும் இது மறுபிறவி என்றே சொல்லலாம். இறுதிக்கட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. "பனிப்பொழிவை அழகாகப் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பால முருகன். வேத் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்," என்கிறார் இயக்குநர் சார்லஸ்.

'சாலை' படத்தின் படப்பிடிப்பில் படக் குழுவினர்.