'சண்டிக்குதிரை'யைத் தொடர்ந்து 'மேல்நாட்டு மருமகன்' பட வெளி யீட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ராஜ்கமல். இவர் நாயகனாக நடித்த முதல் படம் இதுதானாம். ஆனால் முதலில் வெளியீடு கண்டது 'சண்டிக் குதிரை'யாம். "திரைத்துறையில் நடித்து சாதிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியமே. வாய்ப்புக்காக கோடம்பாக் கத்தின் சந்துபொந்துகள் அனைத் திலும் நடந்து நடந்து காலணிகள் தேய்ந்ததுதான் மிச்சம். அந்த நேரத்தில் எனது திருமணமும் நடந்தது. எனவே வாழ்க்கை வண்டியை ஓட்டுவதற்காக தற்காலிகமாக தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங் கினேன்.
"திடீரென சினிமா வாய்ப்பு தேடி வந்தால், தொலைக்காட்சித் தொடரை அப்படியே கைவிட்டுவிட முடியாது அல்லவா? அதனால் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக தொடர்களில் சிறிய கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்வேன். "முக்கிய வேடங்களில் நடித்தால் சின்னத்திரை நடிகர் என்கிற முத்திரை நம் மீது அழுத்தமாக விழுந்துடுமோ, அதனால் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயம் இருந்தது. இப்படி தட்டுத் தடுமாறிக்கொண்டிருந்த வேளையில், இயக்குநர் சேரன் அறிவுரை கூறினார். 'சினிமாவில் நடிக்க வேண்டுமானால், முதலில் சின்னத்திரையில் நடிப்பதை நிறுத்துங்கள்' என்றார். "அதை ஏற்றுக் கொண்டு, சின்னத்திரையில் தலைகாட்டுவதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டேன். அப்போதுதான் அதிசயம் மாதிரி ஒரு விஷயம் நடந்தது. இயக்குநர் எம்.எஸ்.எஸ். என்னைச் சந்தித்து ஒரு கதை சொன்னார். அதுதான் இந்த 'மேல்நாட்டு மருமகன்'.
"வெளிநாட்டுப் பெண் ஒருவர் தமிழகத்தைச் சுற்றிப் பார்க்க வருகி றார். அவரது வழிகாட்டியாக நான் செல்வேன். அடுத்த சில நாட்களில் இருவருக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள்தான் இப்படத்தின் கதை. காதல், நகைச்சுவை என எல்லா அம்சங்களும் கொண்ட படம் இது," என்கிறார் ராஜ்கமல்.
'மேல்நாட்டு மருமகன்' படத்தின் ஒரு காட்சியில் ராஜ்கமல், ஆண்ட்ரியா.

