ஆபாசப் படங்கள்: ராதிகா ஆப்தே அதிர்ச்சி

1 mins read
61819d95-80d4-4d6a-a204-8c07fa1e7a57
-

தனது பெயரில் ஆபாச குறுந்தகடுகள் விற்கப்படும் தகவல் அறிந்து நடிகை ராதிகா ஆப்தே அதிர்ச்சி அடைந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ஆடையில்லாமல் அவர் குளிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. பின்னர் ஹாலிவுட் படத்தில் அவர் நிர்வாணமாக நடித்த காட்சிகளும் வெளியாகின. கதைக்குத் தேவைப்பட்டதால் அந்தக் காட்சியில் நடித்ததாகவும் இந்தியாவில் அதை நீக்கிவிட்டு படத்தைத் திரையிடுவார்கள் என்றும் ராதிகா விளக்கமளித்தார். இந்த சர்ச்சை அடங்கும் முன் அனுராக் கஷ்யப் இயக்கிய குறும்படத்தில் அவர் நிர்வாணமாக நடித்த காட்சிகள், அந்தப் படம் திரைக்கு வருவதற்கு முன்பே இணையத்தளங்களில் கசிந்தன. இந்நிலையில், ராதிகா ஆப்தேவின் பாலியல் காட்சிகள் என்ற பெயரில் அவர் நடித்ததாகக் கூறி வெளிவந்துள்ள ஆபாச காட்சிகளைத் தொகுத்து குறுந்தகடுகளாகச் சிலர் மும்பையில் விற்பனை செய்துவருவதாகக் கூறப்படுகிறது. இதனால் ராதிகா ஆப்தே அதிர்ச்சி அடைந்து உள்ளார். தனது பெயரில் போலியாக அந்தக் குறுந்தகடுகள் விற்பனை செய்யப்படுவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.