நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையைத் தனது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார். நயன்தாரா நடித்த 'நானும் ரௌடிதான்' படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியபோது அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் அதனால் இருவரும் இப்போது ஒரே வீட்டில் வசிப்பதாகவும் வதந்தி நிலவுகிறது. இந்நிலையில், ஓணம் பண்டிகையை இருவரும் ஒன்றாகக் கொண்டாடியிருக்கிறார்கள். கேரளாவின் பாரம்பரிய சேலையில் இருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
காதலருடன் ஓணம் கொண்டாடிய நயன்தாரா
1 mins read
-