தனது கொஞ்சும் குரலால் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஒரியா எனப் பலமொழி மக்களைக் கவர்ந்த பின்னணி பாடகி எஸ்.ஜானகி (படம்) அவர்கள் பாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் 48,000 பாடல்கள், 4 தேசிய விருதுகள், 32 மாநில விருதுகள் என அவரது இசைப் பயணம் மிகவும் நெடியது. 1957ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'விதியின் விளையாட்டு' படம் ஜானகியைப் பாடகி யாகத் திரையில் அறிமுகப்படுத்தியது. அதே ஆண்டில் அவர் மலையாளம், தெலுங்கு படங் களிலும் பாடகியாக அறிமுகம் ஆனார். 78 வயதை எட்டியுள்ள ஜானகி, மலையாளத்தில் தயாராகும் '10 கல்பனைகள்' (10 கட் டளைகள்) படத்தில் இடம்பெறும் 'அம்மா பூவினு' என்று தொடங்கும் பாடலே தன்னுடைய கடைசிப் பாடலாக இருக்கும் என்றும் இனி மேல் படங்களிலும் மேடைகளிலும் பாடப் போவதில்லை என்றும் கூறியுள்ள அவர், தனது பாடகி வாழ்வுக்கு முழுமையான ஓய்வை அறிவித்துள்ளார். ஜானகியின் கடைசிப் பாடலுக்கு இசையமைக்கும் பேறு, மிதுன் ஈஸ்வருக்குக் கிடைத்து உள்ளது.
'இனிமேல் பாடமாட்டேன்'
1 mins read
-

