இயக்குநர் ராம்பாலா படத்தில் வடிவேலு

இயக்குநர் ராம்பாலா படத்தில் வடிவேலு

1 mins read
9d00d0ae-567d-43e8-8549-f25f10d59183
-

இயக்குநர் ராம்பாலாவின் புதிய படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம். அதில் ஜி.வி.பிரகா‌‌ஷும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 'தில்லுக்கு துட்டு' படத்தை இயக்கிய ராம்பாலா அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர்கள் தேர்வைப் படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நகைச்சுவை வேடத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளனராம். அவர்களைத் தேடும் படலம் நடைபெற்று வருகிறதாம். வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் 'கத்திசண்டை' வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. இதையடுத்து, பி.வாசு இயக்கத்தில் 'சிவலிங்கா' படத்திலும் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார் வடிவேலு.